தென்னிந்திய இளைஞர்களுக்கு தொடர்ந்து வெகுதொலைவிலுள்ள இடங்களில் தேர்வுமையம் ஒதுக்கி அலைக்கழிப்பதன் மூலம், தென்னிந்திய இளைஞர்களை ஓரம்கட்டும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுவருகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நீட் தேர்வு முதல் பல்வேறு நுழைவுத் தேர்வுகள், வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளுக்கு வட இந்தியா விலும், வெகுதொலைவிலுள்ள இடங்களிலும் தேர்வு மையங்கள் ஒதுக்கப்படுவது வாடிக்கையாகி வருகிறது. இதுகுறித்து பல்வேறு முறை புகார் எழுப்பப்பட்டும் இந்தப் போக்கு மாறவில்லை.
தமிழகத்தைச் சேர்ந்த அனில்குமார் என்பவர் சமீபத்தில் பாதுகாப்புத் துறை தொடர்பான மத்திய அரசுப் பணிக்கு விண்ணப்பித்துள்ளார். அவருக்கு உத்தரகாண்டில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் மனம் தளர்ந்த அவர், தனது தேர்வு மையத்தை மாற்றக்கோரி விண்ணப்பித்துள்ளார். இதையறிந்த மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், இதுகுறித்து கேள்வியெழுப்பி தேர்வு மையத்தை மாற்றக்கோரியிருந்தார்.
இதையடுத்து, தேர்வை நடத்தும் மத்திய அரசு அதிகாரிகள், "முதலில் வருபவர் களுக்கு முன்னுரிமை என்ற அடிப் படையிலேயே தேர்வு மையம் ஒதுக்குவதில் பின்பற்றப்படுகிறது. தேர்வர்கள் டிக் செய்த ஆப்ஷன் களின்படியே மையம் ஒதுக்கப் பட்டுள்ளது. தேர்வு மையங்கள் முழுக்க முழுக்க ஆட்டோ ஜென ரேட்டட் என்றழைக்கப்படும் முறையால் ஒதுக்கப்படுவதே தவிர மனிதர்கள் தேர்வு செய்வதில்லை' என விளக்க மளித்துள்ளனர். இதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்த வெங்கடேசன், “"இயந் திரங்கள் இயந்திரத்தனமாகத்தான் இருக்கும். அதனால்தான் மனிதத் தலையீட்டைக் கேட்டோம். மனிதர்களிடமிருந்தும் இயந்திரத் தனமாகத்தான் பதில் வருகிறது'’ என பதிவிட்டுள்ளார்.
இதேபோல் கடந்த ஆகஸ்டு மாதம் மத்திய பல்கலையில் சேர் வதற்காக திருவாரூரைச் சேர்ந்த மாணவர் ஒருவர் விண்ணப்பித் திருந்தார். அவருக்கு லட்சத் தீவில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டி ருந்தது. அதுவும் தேர்வுக்கு இரண்டு நாட்கள் முன்புதான் அதற்கான அனுமதிச் சீட்டு வந்தது. ஒரு வார அவகாசம்கூட இல்லாமல் அவர் எப்படி விமானப் பயணச் சீட்டு எடுப்பார்?… எப்படி தேர்வு எழுதுவார்? என விமர் சித்திருந்தார் சு.வெங்கடேசன்.
நீட் தேர்வின்போதும்கூட ஒவ்வோர் ஆண்டும் ஆயிரக்கணக் கான மாணவர்களுக்கு வெளிமாநி லங்களில் தேர்வுமையங்கள் ஒதுக் கப்படுவது தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இது மத்திய அரசின் திறமையின்மையாலா?…அல்லது இதைச் சரி செய்வதற்கான விருப்ப மின்மையாலா? என சமூக ஆர் வலர்களிடமிருந்தும், மாணவர் களின் பெற்றோர்களிடமிருந்தும் கேள்விகள் எழுந்துள்ளது.